மகாராஷ்டிரா: ஆபத்தான முறையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன், முன் பகுதியில் அமர்ந்திருந்த இளைஞர் கைது!

மஹாராஷ்டிரா, கல்யாண் பகுதியில் இளைஞர்கள் இருவர் பரபரப்பான சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக ஓட்டியதால் கைதுசெய்யப்பட்டனர்.
ஆபத்தான முறையில் காரில் பயணம்
ஆபத்தான முறையில் காரில் பயணம்கூகுள்
Published on

மகாராஷ்டிரா, கல்யாண் பகுதியில் இளைஞர்கள் இருவர் பரபரப்பான சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக ஓட்டியதால் கைதுசெய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து உள்ள கல்யாண் பகுதியில், பரபரப்பான சாலையின் நடுவே வெள்ளி நிற பி எம் டபிள்யூ கார் ஒன்று அப்பகுதியை ஆபத்தான முறையில் சுற்றி வந்தது. காரணம் அந்த காரின் முன் பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் அமர்ந்திருக்க, அந்த காரை 17 வயது இளைஞர் ஒட்டிவர... ஆபத்தான இவர்களின் பயணத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களின் மொபைலில் பதிவு செய்தனர்.

அச்சமயத்தில் அந்த பகுதியில் இருந்த போலீசார், அக்காரை நிறுத்தி, அவர்களை விசாரித்தனர். அதில் காரை ஓட்டிய இளைஞருக்கு 18 வயது பூர்த்தியடையாத நிலையில், அவர் கார் ஓட்டுனரின் உரிமம் பெறவில்லை என்றும் தெரியவந்தது. மேலும் அவரின் தந்தை இந்த காரை சமீபத்தில் தான் 5 லட்சத்திற்கு வாங்கியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் சமூகவலைதளங்களில் ரீல்ஸ் போடுவதற்காக, ஆபத்தான முறையில் அவர்கள் இருவரும் காரில் பயணித்ததாலும், 18 வயது நிரம்பாத மகனிடம் காரைக்கொடுத்து பரபரப்பான பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் முறையில் காரை ஓட்ட அனுமதித்ததற்காக அச்சிறுவனின் தந்தையையும், காரை ஓட்டிய அச்சிறுவனையும், காரின் பானட்டில் அமர்ந்தபடி பயணித்த அந்த இளைஞரையும் கைது செய்த போலிசார் அவர்களை விசாரித்து வருகின்றனர்.

ஆபத்தான முறையில் காரில் பயணம்
புனே | மது அருந்திவிட்டு கார் ஓட்டிய சிறுவனை காப்பாற்ற தொடர்ந்து எல்லை மீறும் முறைகேடுகள்...!

சமீபத்தில் சிறுவர்கள் காரை ஓட்டி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வரும் நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக இவர்களை கைது செய்த போலிசார்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com