கூட்டுறவு வங்கி மோசடி புகார்| அஜித் பவார் குடும்பத்திற்கு 'க்ளீன் சீட்' கொடுத்த மும்பை காவல்துறை!

கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் குடும்பத்திற்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கிளீன் சீட் வழங்கியுள்ளது.
அஜித் பவார், சுனேத்ரா
அஜித் பவார், சுனேத்ரா ட்விட்டர்
Published on

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் 2வது கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாய் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25,000 கோடி மோசடி செய்த வழக்கில், துணை முதல்வர் அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா பவார் ஆகியோர் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) அறிக்கை சமர்பித்துள்ளது.

இதையும் படிக்க: ”மோடி அரசால் நாட்டைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன்” - ஆஸி. பெண் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

அஜித் பவார், சுனேத்ரா
மகாராஷ்டிரா: ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் முடிவுக்கு வந்த தொகுதிப் பங்கீடு!

இதுகுறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே, "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவருக்கு க்ளீன் சீட் வழங்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவருக்கும் க்ளீன் சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என EOW அறிக்கை சமர்ப்பித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியில் சரத் பவார் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவாரும் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து துணை முதல்வர் ஆகியிருக்கிறார். இவருடைய மனைவி சுனேத்ரா பவார், பாராமதி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு வங்கி மோசடி குறித்த புகாரில்தான் தற்போது அவர்களுக்கு சாதகமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

இதையும் படிக்க: தொடரும் சோகம்: அமெரிக்காவில் கார் மோதி 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

அஜித் பவார், சுனேத்ரா
பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com