பெண்கள் பற்றி தரக்குறைவாகப் பேசிய மகாராஷ்டிரா MLA.. எழுந்த எதிர்ப்பு.. அறிவுரை கூறிய துணை முதல்வர்!

பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய மகாராஷ்டிரா எம்.எல்.ஏவும் அஜித் பவாரின் ஆதரவாளருமான தேவேந்திரா புயாருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேவேந்திரா புயார்
தேவேந்திரா புயார்எக்ஸ் தளம்
Published on

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் வருத்-மோர்ஷியின் சுயேட்சை எம்.எல்.ஏவும், துணை முதல்வர் அஜித் பவாரின் ஆதரவாளருமான தேவேந்திர புயார், தற்போது பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய விஷயத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "அழகாய் இருக்கும் பெண்கள், முதலில் உங்களையோ அல்லது என்னைப் போன்றவர்களையோ தேர்வு செய்யமாட்டார்கள். மாறாக, அவர்கள் வேலையில் இருக்கும் ஆண்களையே விரும்புவார்கள். இரண்டாம் வகை பெண்கள் சிறு வணிகம் நடத்தும் கடைக்காரர்களை திருமணம் செய்துகொள்வார்கள். அதேசமயம், மூன்றாம் வகை பெண்கள்தான் விவசாயிகளின் மகன்களை மணக்கிறார்கள். அத்தகைய திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் பலவீனமடைகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!

தேவேந்திரா புயார்
மகாராஷ்டிரா: மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெண்களின் தோற்றம் குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் தரக்குறைவாக பேசிய புயாரின் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பெண்கள் மற்றும் விவசாய சமூகத்தை இழிவுபடுத்துவதாகவும், அவமரியாதை செய்வதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான யஷோமதி தாக்கூர், "பெண்களை இப்படி வகைப்படுத்துவதை யாரும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். அஜித் பவாரும் அதிகாரத்தில் இருப்பவர்களும் தங்கள் எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், சமூகம் உங்களுக்கு பாடம் கற்பிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதுபோல் சிவசேனா தாக்கரே குழுவின் துணைத் தலைவர் சுஷ்மா அந்தரேவும் தேவேந்திர புயாரை விமர்சித்தார். அவர், “புயாரின் பேச்சு பெண்களை மட்டும் இழிவுபடுத்துவதாக இல்லை. இது, விவசாயத்தில் வேலை செய்பவர்களை கேலிக்கூத்தாக்கும் செயல். ஆனால், தற்போது ஷிண்டே குழு, அஜித் பவார் குழுவினர் பேசும் பாணியை பின்பற்றுவதில்லை. நாங்கள் என்ன சொன்னாலும் காவல்துறையோ அல்லது யாரோ எங்களை தண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே, அவர் இப்படிப் பேசியுள்ளார்” என விமர்சித்திருந்தார்.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

தேவேந்திரா புயார்
உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்காவிட்டால் சாப்பிடாதீங்க: சிவசேனா எம்.எல்.ஏ.வின் வினோத உத்தரவு

தேவேந்திர புயாரின் இந்த கருத்து குறித்து துணை முதல்வர் அஜித் பவார், “இந்த கருத்து பெண்களுக்கு வேதனை தருவதாக உள்ளது. மேலும், இது விவசாயிகளை அவமதிக்கும் செயலாகும். இதை அறிந்ததும் அவருக்கு நான் போன் செய்து, ’விவசாய சங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் இப்படிப் பேசலாமா’ எனக் கேட்டேன்.

அதற்கு அவர், ‘இது எனது நோக்கமல்ல. விவசாயிகளின் வருமானத்தைக் கருத்தில்கொண்டு, பெண்கள் தொழிலாளர்களை விரும்புவதாகவும், முன்பு பெண்கள் நிலவுடைமையாளர்களுக்கு முன்னுரிமை அளித்ததாக’வும் தெரிவித்தார். ஆனால், நான் அவரிடம், ’நீங்கள் இப்படிப் பேசுவது தவறு. ஒருபோதும் அப்படிப் பேசக்கூடாது’ என கண்டித்தேன். தவிர, இதுதொடர்பாக அவருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினேன். மேலும், அவர் பேசிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கக் கோரியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வாரணாசி| கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்துத்துவா அமைப்பினர்.. கிளம்பிய எதிர்ப்பு!

தேவேந்திரா புயார்
”இது அம்பேத்கர், பூலேவின் பூமி; மனுதர்மத்திற்கு மராட்டியத்தில் இடமில்லை”- துணை முதல்வர் அஜித் பவார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com