உச்சம்தொட்ட விலை.. தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான மகாராஷ்டிரா விவசாயி!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த துக்காராம் பாகோஜி என்ற விவசாயி, தனது 12 ஏக்கர் விளைநிலத்தில் தக்காளியை பயிரிட்டுள்ளார். தக்காளி விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், அவர் கடந்த ஒரு மாதத்தில் 13 ஆயிரம் பெட்டிகள் அளவுக்கு தக்காளிகளை அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். இதன்மூலம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 900 பெட்டிகள் தக்காளிகளை ஏற்றுமதி செய்து 18 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய விவசாயி துக்காராம், மூன்று மாதங்களில் தாங்கள் செலுத்திய கடின உழைப்புக்கு கிடைத்த பலன் இது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

துக்காராம் மட்டுமின்றி, புனே மாவட்டத்தின் ஜுன்னார் கிராமத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் பலரும் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகி உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com