முறைக்கேட்டில் ஈடுபட்ட பயிற்சி பெண் ஐஏஎஸ்; அதிரடி நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா மாநில நிர்வாகம்!

மகாராஷ்டிராவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பயிற்சியை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது... இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட என்ன காரணம், இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.
யிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர்
யிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர்முகநூல்
Published on

செய்தியாளர்: ரவிக்குமார்

மகராஷ்டிரா மாநில அரசினால், இப்படி ஒரு நடவடிக்கைக்கு உள்ளானவரின் பெயர் பூஜா கேட்கர். புனே நகரில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் தான் பூஜா கேட்கர். அதாவது உதவி ஆட்சியர். இந்தப் பணியின்போது, இவர் நடந்து கொண்ட விதம், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கேள்விகளையும் எழுப்பியது.

புனேவில் பயிற்சி அதிகாரியாக சேரும் முன்பே, அலுவலகத்தில் தனக்கு தனி அறை, இன்டர்காம் ஃபோன் வசதி, லெட்டர்பேட், பெயர்ப்பலகை, தனக்கென தனிவீடு, தனக்கென ஊழியர்கள் என பட்டியலிட்டு, அவற்றை வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.

பணியில் சேர்ந்த பிறகு, தனது சொந்த ஆடி காரில் சட்டவிரோதமாக சைரன் வைத்துக் கொண்டு வலம் வந்துள்ளார். காரில் மகாராஷ்டிரா அரசு என பெயர்ப்பலகை வைத்துள்ளார். தனது தந்தை திலீப், மகாராஷ்டிரா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது, பூஜாவின் இருமாப்பு. ஆனால், இப்படியான நெருக்கடிகள் குறித்து மகாராஷ்டிராவின் தலைமைச் செயலருக்கு மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் புகார் அளித்ததால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

யிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர்
”நான் குற்றவாளி அல்ல; உண்மை வெளிவரும்” - குற்றச்சாட்டிற்கு பதிலளித்த புனே பயிற்சி பெண் IAS அதிகாரி!

இவர் மீதான பழைய சர்ச்சைகளும் உயிர் பெற்றன. தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்த பூஜா, மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் பணியில் சேர்வதற்காக பார்வைத்திறன் குறைபாடு இருப்பதாக குறிப்பிட்டு, சிறப்பு ஒதுக்கீட்டில் பணியைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் புனேயில் வேலை ஒதுக்கப்படும் முன்பு, அவரது குறைபாடு பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.. ஆனால், அவர் விதவிதமான சாக்குபோக்குகள் கூறிவிட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு செல்லாமல் தவிர்த்துள்ளார். இப்படி நீண்ட இழுபறிக்குப் பிறகுதான், பணியில் சேர்ந்துள்ளார்.

பூஜா - பூஜாவின் தந்தை திலீப்
பூஜா - பூஜாவின் தந்தை திலீப்

பார்வைக்குறைபாடு இருப்பதாக, பூஜா குடும்பத்தினர் போலிச் சான்றிதழ் கேட்டபோது, சில மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்த கடிதம் வைரலானது. வெவ்வேறு தருணங்களில், அரசிடம் பூஜா சமர்ப்பித்த சான்றிதழ்களில், அவரது வயது குறித்த விவரங்களிலும் முரண்பாடுகள் இருந்தன. இதுதவிர, சாதிச்சான்றிதழிலும் முறைகேடு செய்தது வெளிவந்துள்ளது. பூஜா கேட்கர் தன்னை, ஓ.பி.சி. கிரீமிலேயர் பிரிவைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரிவில் சலுகை பெற ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும்.

யிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர்
IAS போலிச் சான்றிதழ் விவகாரம்| புனே பெண் அதிகாரியைத் தொடர்ந்து மேலும் பலர் மீது குவியும் புகார்கள்!

ஆனால், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பூஜாவின் தந்தை திலீப், அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, தனக்கு 40 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். பூஜாவுக்கும் 70 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தாயார் மனோரமா பஞ்சாயத்து தலைவர். எனவே வருமானத்தை குறைத்துக் காட்டி மோசடி செய்தது அம்பலமானது.

இந்த விவகாரங்களில் தொடரப்பட்டுள்ள, துறைரீதியான வழக்குகளைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பூஜா கேட்கர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பூஜாவின் தாய் மனோரமா, நிலம் குறித்த தகராறில் விவசாயிகளை நோக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காட்சிகள் வைரலாகின.

மனோரமா - பூஜாவின் தாய்
மனோரமா - பூஜாவின் தாய்

இந்த விவகாரத்தில், பூஜா கேட்கர் தாய் மனோரமா, தந்தை திலப் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சர்ச்சைகள் பூதாகரமாகியுள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவிக்கிறது.

யிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர்
“துப்பாக்கி காட்டி மிரட்டினார்”-சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் IAS அதிகாரி பூஜா கேட்கரின் பெற்றோர்

புனேவிலிருந்து வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார் பூஜா. அவர் அங்கு பணியில் சேர்ந்துவிட்டதாக வாஷிம் மாவட்ட ஆட்சியர் புவனேஸ்வரி உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் அதிரடி ட்விஸ்ட்டாக, பூஜா கேட்கரை மாவட்ட பயிற்சித்திட்டத்தில் இருந்து விடுவித்துள்ள மகாராஷ்டிரா மாநில நிர்வாகம். உத்தரகாண்டில், முசோரி நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐஏஎஸ் பயிற்சி அகாடமிக்கே திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com