கிராமத்தில் நெட்வொர்க் இல்லை: மலையில் குடில் அமைத்து படிக்கும் கல்லூரி மாணவி!

கிராமத்தில் நெட்வொர்க் இல்லை: மலையில் குடில் அமைத்து படிக்கும் கல்லூரி மாணவி!
கிராமத்தில் நெட்வொர்க் இல்லை: மலையில் குடில் அமைத்து படிக்கும் கல்லூரி மாணவி!
Published on

ஆன்லைன் வகுப்புக்கு நெட்வொர்க் வேண்டுமென்பதால் மலையில் குடில் அமைத்து படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

கொரோனா பரவலினால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் மூலமாக செல்போன் வழியே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துகின்றனர். இப்படி பள்ளிப் படிப்பு என்பது கொரோனாவால் முற்றிலும் மாறிபோயுள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் தற்போது விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது.

பல மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கான வசதி இல்லாமல் உள்ளது. அப்படி செல்போன், லேப்டாப் இருந்தாலும் இணையசேவை இல்லாமல் பல கிராமங்கள் உள்ளன. அப்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், மலையில் நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் தற்காலிக குடில் ஒன்று அமைத்து தன்னுடைய ஆன்லைன் வகுப்பை தொடர்ந்து வருகிறார். வனத்துறை அதிகாரி தேவ் பிரகாஷ் மீனா பகிர்ந்த அந்த பெண்ணின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் பகுதியைச் சேர்ந்த கல்லூரின் மாணவியான ஸ்வப்னாலி கோபிநாத் கல்லூரி படித்து வருகிறார். தற்போது கொரோனாவால் ஆன்லைன் வகுப்பு அவருக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது கிராமத்தில் செல்போன் நெட்வொர்க் இல்லை. எனவே அருகில் உள்ள மலையில் சிக்னல் கிடைக்கும் இடத்தை தேர்வு செய்த ஸ்வப்னாலி, அங்கு சிறிய குடில் அமைத்து அங்கேயே காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை படித்து வருகிறார். படிப்பின் மீது ஸ்வப்னாலி கொண்டுள்ள ஆர்வத்தை இது காட்டுவதாக பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com