மகாராஷ்டிரா: டெய்லர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து - இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் மூச்சுத்திணறி பலி

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் முன்பு ஔரங்காபாத் என்று அழைக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடை
தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடைட்விட்டர்
Published on

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரின் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் இன்று அதிகாலை 4 மணியளவில் டெய்லர் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு அடுக்குமாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் பாதிப்பு இருந்துள்ளது. தீயின் பாதிப்பு இரண்டாவது மாடிக்கு எட்டவில்லை.

இதுகுறித்து சம்பாஜி நகர் காவல் ஆணையர் மனோஜ் லோஹியாவை பேசுகையில், “அதிகாலை 4 மணியளவில் டெய்லர் கடையில் தீப்பிடித்துள்ளது. தரைத்தளத்தில் பற்றிய தீயில் இருந்து கிளம்பிய புகையானது முதல் தளத்திற்கு சென்றுள்ளது. அங்கு முதல் தளத்தில் அதாவது தீப்பற்றிய கடையின் நேராக மேலே குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மூச்சுத்திணறல் காரணமாக ஏழு பேர் இறந்ததாக தெரிகிறது. வீட்டியில் இருந்து தப்பித்து வெளியே வரமுடியாத அளவிற்கு அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். புகை உள்ளே சென்றதும் அவர்கள் சுய நினைவை இழந்துவிட்டனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது..." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com