மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவசேனா கட்சி நிறுவனர் பால்தாக்கரேயின் பேரன் ஆதித்ய தாக்கரே மனுதாக்கல் செய்தார்.
மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி சட்டப்பரேவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், சிவசேனா கட்சியின் கோட்டையாக கருதப்படும் மும்பையில் உள்ள வொர்லி சட்டமன்றத் தொகுதியில் அக்கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் பேரனும் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே போட்டியிடுகிறார்.
தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் நபரான ஆதித்ய தாக்கரே இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொண்டர்களை புடைச்சூழ ஆட்டம், பாட்டு கொண்டாடத்துடன் ஊர்வலமாக சென்று ஆதித்ய தாக்கரே மனுதாக்கல் செய்தார்.