மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!
Published on

நாளை காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் இன்று இரவு 9 மணிக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு நாளை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சமூகவலைதளம் மூலம் உத்தவ் தாக்கரே பேசத் துவங்கினார். மகாராஷ்டிரா அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கும் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FUddhavBalasahebThackeray%2Fvideos%2F5162122163901235%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

இன்று மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பெருமைபட கூறினார். இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் திருப்திகரமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். “பால்தாக்கரேவின் கனவை நிறைவேற்றியிருக்கிறேன்” என்று பெருமித்துடன் உத்தவ் தாக்கரே கூறினார். இதையடுத்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். சிவசேனா தொண்டர்களிடையே பதவியை ராஜினாமா செய்வதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.

ஆளுநரிடம் உத்தவ் தாக்கரே ராஜினாமா கடித்ததை வழங்கும் பட்சத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லாமல் போய்விடும். புதிய அரசு அமைக்க முன்வரும் நபர் ஆளநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதே அடுத்த நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com