சிவசேனா கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஒர்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனுமான அமைச்சர் ஆதித்யா தாக்கரேவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளவர் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவருமே பரிசோதித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இரண்டாவது நாளாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.