கொரோனா அச்சம் - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல்

கொரோனா அச்சம் - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல்
கொரோனா அச்சம் - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல்
Published on

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் அதிக அளவில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள நபர்களை கண்டறியும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. அப்படி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்தால் அதற்கு முதலில் சீல் வைக்கப்படுகிறது.

அந்த வகையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்தமான மதோஸ்ரீயில் உள்ள இல்லத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இல்லத்திற்கு அருகில் உள்ள நெருக்கமான டீ வியாபாரிக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மும்பை மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே, அவரது மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் இந்த இல்லத்தில்தான் வசித்து வருகிறார்கள். மும்பை நகரில் 433 பேருக்கு 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com