தொடரும் பட்டியல்: கட்சி மாறிய 4வது எம்.பி.. உத்தவ்தாக்கரே கட்சியில் ஐக்கியம்.. பாஜகவுக்கு பின்னடைவு?

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில், சீட் கிடைக்காத விரக்தியில் சில கட்சி நிர்வாகிகள் பிற கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக எம்பி ஒருவர், இன்று (ஏப்ரல் 3) உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இணைந்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவுடன் உன்மேஷ் பாட்டீல்
உத்தவ் தாக்கரேவுடன் உன்மேஷ் பாட்டீல்ட்விட்டர்
Published on

உத்தவ் தாக்கரே கட்சிக்குத் தாவிய பாஜக சிட்டிங் எம்பி! 

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருப்பவர் உன்மேஷ் பாட்டீல். இவர், கடந்த தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார். 2019இல், ஜல்கான் தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் உன்மேஷ் பாட்டீல் வெற்றி பெற்றிருந்தார். 2014ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் சாலிஸ்கான் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உன்மேஷ் பாட்டீல் 2015 முதல் 2019 வரை மகாராஷ்டிர மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு லிமிடெட்டின் தலைவராக பணியாற்றினார். இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் அவருக்கு மீண்டும் பாஜக சீட் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அவருக்குப் பதிலாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவின் மகளிர் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவருமான ஸ்மிதா வாக்கை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. இதையடுத்து அவர், இன்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக, உன்மேஷ் பாட்டீல் பாஜகவிலிருந்து விலகினார். பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் ஜல்கான் தொகுதியில் உத்தவ் தாக்கரே தரப்பில் உன்மேஷ் பாட்டீல் நிறுத்தப்பட்டால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அவர், கடந்த தேர்தலில் 7 லட்சத்திற்கும் மேல் ஓட்டுகள் வாங்கியிருந்தார்.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

உத்தவ் தாக்கரேவுடன் உன்மேஷ் பாட்டீல்
பீகார்: காங்கிரஸில் இணைந்த மற்றொரு பாஜக எம்.பி... காரணம் என்ன?

மகாராஷ்டிரா: இரு கூட்டணியிலும் தொடரும் இழுபறி!

மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணியிலான மகாயுதி (மகா கூட்டணி) ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், இக்கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதையடுத்து, கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிலும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் குறிவைத்திருந்த தொகுதிகளுக்கு பாஜக, முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்திருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், இந்தக் கூட்டணியின் எதிர்க்கூட்டணியாக விளங்கும் மகா விகாஸ் அகாடியிலும் (உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) இழுபறி நீடித்து வருகிறது. இதனால், உத்தவ் தாக்கரே சிவசேனா 16 தொகுதிகளுக்கு முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 41 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜகவும், பிரிக்கப்படாத சேனாவும் கைப்பற்றின. அதில், பாஜக 23 இடங்களிலும், சேனா 18 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் 5 இடங்களில் வென்றிருந்தது.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதி எம்பி ராகுல் கஸ்வானும், ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதி எம்பி பிரிஜேந்திர சிங்கும், பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியின் சிட்டிங் எம்பி அஜய் குமார் நிஷாத்தும் காங்கிரஸில் இணைந்திருந்தனர். அந்த வரிசையில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் தொகுதி சிட்டிங் எம்பியான உன்மேஷ் பாட்டீலும் தற்போது உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனாவில் ஐக்கியமாகி உள்ளார்.

இதையும் படிக்க: டெல்லி: சிறையில் கெஜ்ரிவால்..மனைவி சுனிதா உடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆலோசனை! அடுத்து என்ன?

உத்தவ் தாக்கரேவுடன் உன்மேஷ் பாட்டீல்
பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com