பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்
Published on

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகைசெய்யும் “சக்தி சட்ட” வரைவு மசோதாவுக்கு மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களைத் தடுக்கும் முயற்சியில், அதுதொடர்பான குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின் பயன்பாட்டிற்காக ஐபிசி, சிஆர்பிசி மற்றும் போக்ஸோ சட்டம் தொடர்புடைய பிரிவுகளைத் திருத்த முயல்கிறது. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, அது வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

"சக்தி சட்டம்" என்று அழைக்கப்படும் இந்த மசோதா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்துரையாடலுக்கு பின் ஒப்புதலுக்கு வரும் என்றும், அதன்பிறகு மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த மசோதாவின்படி ஒரு வழக்கில் 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும், 30 நாட்களுக்குள் வழக்கினை முடிக்கவும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து வருடங்களுக்கும் குறையாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவார்கள், ஆனால் இயற்கையான வாழ்வின் எஞ்சிய காலம் வரை சிறை மற்றும் கொடூரமான குணாதிசயங்களைக் கொண்ட வழக்குகளில் மரணதண்டனை விதிக்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹ 10 லட்சம் தொகை வழங்கப்படும், அந்த தொகை குற்றவாளியிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்படும். சக்திச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளைச் சமாளிக்க 36 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு அரசு வக்கீல் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆந்திராவின் திஷா சட்டத்தின் படி இந்த சக்தி சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com