கோவிட் -19 இன் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே “கொரோனா மூன்றாம் அலை இரண்டாவது அலையை விட வலுவானதா அல்லது பலவீனமானதா என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது. தடுப்பூசி இப்போதே உதவாவிட்டாலும், அது எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். இன்று அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கடந்த ஆண்டு நாம் உருவாக்கிய பணிக்குழுவை அடிப்படையாகக் கொண்டது. இந்த முடிவுகள் அறிவியல் மற்றும் மருத்துவ உண்மைகளின்படி எடுக்கப்படுபவை, அரசியலால் அல்ல" எனக்கூறினார்.
மூன்றாம் அலைகுறித்து பேசிய ஆதித்யா தாக்கரே "குறைவான அறிக்கையிடல் உதவப் போவதில்லை என்ற உண்மையான நம்பிக்கைக்கு நாங்கள் வந்துள்ளோம். எனவே இப்போது நாங்கள் மூன்றாவது அலைக்குத் தயாராகி வருகிறோம். மாநிலத்தில் ஐந்து லட்சம் படுக்கைகள் உள்ளன, அவற்றில் 70% ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டவை" என்று கூறினார்.
கொரோனாவால் நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. நேற்று மட்டும் இம்மாநிலத்தில் 67,123 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில் இதுவரை 37.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், இதில் 30.6 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 60,000 பேர் உயிரிழந்துள்ளனர்.