மஹாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கனமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேற்கு மஹாராஷ்டிரா வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்கு 27 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் நர்மதா நதியில் அபாய அளவையும் கடந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் இருந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.