மகாராஷ்டிரா: ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் முடிவுக்கு வந்த தொகுதிப் பங்கீடு!

மகாராஷ்டிராவில் ’மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.
மகா விகாஸ் அகாடி கூட்டணி
மகா விகாஸ் அகாடி கூட்டணிட்விட்டர்
Published on

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில்தான் அஜித் பவாரின் கட்சியும் உள்ளது. இதற்கு நேர் எதிரே உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் கட்சி ஆகியன ’மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துச் செயல்பட்டு வருகின்றன. எனினும் இதுநாள் வரை இந்தக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு 10 தொகுதிகளிலும் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காங்கிரஸின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? ராகுலை கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர்!

மகா விகாஸ் அகாடி கூட்டணி
பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் பிரிவு தலைவர் நானா படோல் ஆகியோர் கூட்டாக தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை அறிவித்தனர்.

தொகுதிப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து, உத்தவ் தாக்கரே, "ஒவ்வொருவரும் போட்டியிட விரும்புகிறார்கள். அதில் தவறேதும் இல்லை. வெற்றியைக் கருத்தில்கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடுவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னதாக, கூட்டணியில் இழுபறி நீடித்த நிலையில் உத்தவ் தாக்கரே 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| சிகரெட் பிடித்த இளம்பெண்கள்; உற்றுப் பார்த்த நபர்.. இறுதியில் கொலையில் முடிந்த கொடூரம்!

மகா விகாஸ் அகாடி கூட்டணி
அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com