அட்சயதிருதியை: கோயிலில் அலங்கரிக்கப்பட்ட 7000 மாம்பழங்கள் கொரோனா நோயாளிகளுக்கு விநியோகம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அட்சய திருதியை முன்னிட்டு, கோயிலை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்ட 7000 மாம்பழங்கள் கொரோனா நோயாளிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
அட்சய திருதியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூர் பகுதியில் உள்ள விட்டல் ருக்மணி என்ற கோயில், 7000 மாம்பழங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த மாம்பலங்களை பூனேவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வழங்கியுள்ளார்.
திருவிழா முடிந்த நிலையில் அலங்கரிக்கப்பட்ட 7000 மாம்பழங்களையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நன்கொடையாக அளிக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, கோயில் சடங்குகள் முடிந்த பின்னர் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாம்பழங்கள் விநியோகிக்கப்பட்டது.
இங்கு மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் உள்ள கோயில்களிலும் அட்சய திருதியை திருவிழா கொண்டாடப்பட்டது. பூனேவில் உள்ள கணபதி கோயிலுக்கு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று 1,111 மாம்பழங்களை வழங்கிய நிலையில், அதனைக்கொண்டு அங்கு திருவிழா கொண்டாடப்பட்டது. அதே போல கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி மாவட்டம் பகுதியில் உள்ள கபிலேஷ்வரர் கோயிலும் 1001 மாம்பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டன.