மத்திய பிரதேச மாநிலத்தில் புறநோயாளிகள் பிரிவில் ஜோதிடர்களை பணியமர்த்தும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்த மத்தியபிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் ஜோதிடர்கள், வாஸ்து நிபுணர்கள், கைரேகை பார்ப்பவர்கள் உள்ளிட்டவர்களை நியமனம் செய்ய அம்மாநில அரசு
முடிவெடுத்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் ஜாதகம் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கவும், அவர்களின் நோய்க்கான காரணம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கவும் இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹரிஷி பதாஞ்சலி சமஸ்கிருத சாஸ்தான் என்ற அமைப்பின் மூலமாக இந்த ஜோதிடர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், மருத்துவர்கள் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் இவர்கள் நோயாளிகளின் கிரக நிலைகளை ஆராய்ந்து மருத்துவமனை
ரிப்போர்ட்டுடன், நோயாளியின் கிரகநிலை ரிப்போர்ட்டுகளும் வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற 5 ரூபாய் கட்டணம்
வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதகம் இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு ஜாதகத்தை கணிக்கவும் தனிப்பிரிவு ஜோதிடர்கள் தயாராக இருப்பார்கள்
என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச அரசின் இந்த முடிவு இணையத்தில் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "அப்போ....விரைவில் மருத்துவர்கள் மற்றும்
செவிலியர்கள் அறநிலையத்துறை மாற்றப்படுவார்களா...?" என்றும் அவர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.