ஆதார் எண் கட்டுப்பாட்டுக்குள் வரும் கால்நடைகள்!

ஆதார் எண் கட்டுப்பாட்டுக்குள் வரும் கால்நடைகள்!
ஆதார் எண் கட்டுப்பாட்டுக்குள் வரும் கால்நடைகள்!
Published on

மத்திய பிரதேசத்தில் சுமார் 2.4 லட்சம் கால்நடைகளுக்கு அடையாள எண் அட்டை பொருத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணைப் போலவே சுமார் 2.4 லட்சம் கால்நடைகளுக்கு மத்தியப் பிரதேசத்தில் அடையாள எண் அட்டை பொருத்தப்பட்டுள்ளது. கால்நடைகளின் வயது, ரகம், இனம் இவற்றின் அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகள், கால்நடைகளின் பால் உற்பத்தி, எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பொருத்தப்பட்டுதாக மத்திய பிரதேச கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுகளின் காதுகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகள், தேசிய பால் உற்பத்தி வாரியத்தின் லட்சியத் திட்டமாகும். இதன்மூலம் தேசிய அளவில் உள்ள பசுக்கள் மற்றும் எருதுகள் தொடர்பாக தகவல்கள் அனைத்தும் விலங்குகள் உற்பத்தி மற்றும் சுகாதார தொழிநுட்பத் தகவல்களுக்குள் வந்துவிடும் எனவும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் குலாப்சிங் தவர், “நாங்கள் இந்த மாதத்தில் மட்டும் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கு அடையாள அட்டையை பொறுத்தியுள்ளோம். மத்தியப் பிரதேசத்திற்கு முதற்கட்டமாக 40 லட்சம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதில் 2.4 லட்சம் அடையாள அட்டைகள் கால்நடைகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள 90 லட்சம் கால்நடைகளுக்கும் அடையாள அட்டைகள் பொருத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த அடையாள அட்டைகள் மாடுகளின் வயது, இனத்தின் அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த அடையாள எண்கள், விலங்குகள் உற்பத்தி மற்றும் சுகாதார தொழிநுட்பத் தகவல்களுக்குள் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பிறகு கால்நடைகளின் உரிமையாளர்களது ஆதார் எண்ணும், இந்த கால்நடை அடையாள எண்ணும் இணைக்கப்படும். அதன்மூலம் சட்டவிரோதமாக மாடுகளை விற்றாலோ, இறைச்சிக்கு வழங்கினாலோ அல்லது பராமரிக்காமல் விட்டாலோ கண்டுபிடிக்கப்படும். இது மாடுகளின் உற்பத்தியை பெருக்க முடியும். அதன்படி மாடுகளின் உரிமையாளர் வருமானத்தை அதிகரிக்கச் செய்வோம்.” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com