”பட்டம் பெறுவதால் பயனில்லை; பஞ்சர் கடை வைக்கலாம்” - மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பாஜக எம்.எல்.ஏ.!

மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவா், ‘படித்து பட்டம் பெறுவதால் பயனில்லை. மோட்டாா் சைக்கிளுக்கு ‘பஞ்சா்’ பாா்க்கும் கடை வைக்கலாம்’ எனப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாலால் ஷக்யா
பன்னாலால் ஷக்யா எக்ஸ் தளம்
Published on

நாட்டில் உயா்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிஎம் காலேஜ் ஆஃப் எக்சலன்ஸ்’ (பிரதமா் சிறப்புக் கல்லூரி) என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் 55 மாவட்டங்களில் இந்த புதிய கல்லூரிகளை உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைத்தாா். குணா மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் அத்தொகுதி எம்எல்ஏ பன்னாலால் ஷக்யா பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், ”இங்கு பிரதமா் சிறப்புக் கல்லூரியைத் தொடங்கியுள்ளோம். மாணவா்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. இதற்குப் பதிலாக மோட்டாா் சைக்கிளுக்கு பஞ்சா் பாா்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்” என்றார்.

மேலும் அவர், “பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் எதையும் சாப்பிடுகிறார்கள். மக்கள் மரங்களை நடுகிறார்கள், ஆனால் அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஆர்வம் காட்டவில்லை. மனித உடலை உருவாக்கும் பஞ்சதத்வாவை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழலில் கவலை உள்ளது, ஆனால் யாரும் இந்த திசையில் (பஞ்சதத்வாவை காப்பாற்ற) செயல்படவில்லை. இன்று நாம் நட்ட மரங்களை எவ்வளவு காலம் பாதுகாத்து அவை வளர உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பஞ்சர் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: வீரமரணம்அடைந்த கேப்டன்|கோரிக்கை வைத்த பெற்றோர்..மவுனம் காக்கும் மனைவி..பங்கு பிரிக்கப்பட்டது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com