நவராத்திரி என்றழைக்கப்படும் இந்துக்களின் விரைவில் பண்டிகை நடைபெற உள்ளது. இந்தப் பண்டிகை வடஇந்தியாவில் மிகப் பிரபலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்திலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கார்பா நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிலையில், ”கார்பா பந்தல்களுக்குள் நுழையும் பக்தர்கள், மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர்” என இந்தூர் மாவட்ட பாஜக தலைவர் சிந்து வர்மா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர், “கார்பா நிகழ்ச்சிக்குப் பக்தர்கள் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். உண்மையான இந்துக்கள், கண்டிப்பாக இதை எதிர்க்க மாட்டார்கள். இந்துக்கள் தவிர, வேறு யாரும் வந்துவிடகோடது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
”பாஜக தலைவர் சிந்து வர்மாவின் இந்த கருத்து ஏற்புடையது இல்லை, இதனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்” என்றும் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா, ”பாஜக தலைவர்கள் பசுக் காப்பகங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கவனிக்காமல் மௌனமாக உள்ளனர்.
ஆனால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர். அரசியலில் மக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் அவர், கார்பா பந்தல்களுக்குள் செல்லும் முன்பு, பாஜக தலைவர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வேண்டும் என்றும், அதை வீடியோவில் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.