மத்தியப் பிரதேசம்: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கோமியம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ

மத்தியப் பிரதேசம்: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கோமியம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ
மத்தியப் பிரதேசம்: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கோமியம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ
Published on

தினமும் கோமியம் அருந்துவதால் கொரோனா தன்னை தாக்கவில்லை என்று போபால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா கூறியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ பிசி சர்மா, கோமியம் நிரப்பப்பட்ட இரண்டு சிறிய கண்ணாடி பாட்டில்களை மத்திய சுகாதார அமைச்சர்  ஹர்ஷ் வர்தனுக்கு அனுப்பிவைத்தார்.

கோமியத்தை பரிசோதித்து, அது கொரோனாவை குணப்படுத்துமா என்பது குறித்து பொதுவில் ஒரு அறிக்கையை வெளியிடுமாறு முன்னாள் அமைச்சர் பிசி சர்மா மத்திய அமைச்சருக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். "சாத்வி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் பிரதிநிதி. அவர் கோமியம் கோவிட் 19 குணப்படுத்துவதாக கூறுவதால், தடுப்பூசியை தேர்வு செய்யலாமா அல்லது கோமியம் குடிக்க வேண்டுமா என்று மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே இதனை தெளிவுபடுத்துவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பாகும்" என்று சர்மா கூறினார். மேலும் அவர் தனது கடிதத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை கோமியம் கொரோனாக்கு சிகிச்சையளிக்க உதவுமா என்பதை உறுதிப்படுத்தவேண்டும்  என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 "எங்கள் வாழ்க்கையிலும் மதத்திலும் பசுவுக்கு முக்கியத்துவம் உள்ளது. நாங்கள் பசுவை வணங்குகிறோம். மாட்டு பால், மாட்டு சாணம் மற்றும் மாட்டு சிறுநீருக்கு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் கோமியம் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்று சொல்வது நகைச்சுவையாகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நகைச்சுவை செய்யும் நேரமா இது? " என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சர்மா.

சாத்வி பிரக்யா, ஞாயிற்றுக்கிழமை போபாலில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது, ” நான் தொடர்ந்து கோமியம் குடிப்பதால், இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை. கோவிட் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க கோமியம் குடிக்க வேண்டும்என்றும் அவர் மக்களை வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com