கொலை‌களுக்‌கா‌‌ன காரணங்கள்: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்

கொலை‌களுக்‌கா‌‌ன காரணங்கள்: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்
கொலை‌களுக்‌கா‌‌ன காரணங்கள்: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்
Published on

இந்தியாவில் கொலைக்கா‌‌‌‌‌‌‌‌‌ன‌ காரணங்களில் முறையற்ற உறவுகள் உள்ளிட்ட காதல் விவகாரங்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

2‌011 மு‌தல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்‌‌‌ நடந்த‌ கொலைகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருந்தது. இதில்‌ தனிநபர் பழிவாங்குதல் போன்ற காரணங்களுக்காக நடந்‌த‌ கொலை‌களின் எண்ணிக்கை‌‌ 67 ஆயிரத்து 774 ‌‌என தெரிவிக்கப்‌பட்டுள்ளது‌. ‌‌அதற்கு அடுத்தபடியா‌க சொத்து பிரச்னைக்காக 51 ஆயிரத்து 554 கொலைகள், நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணங்களில் காதல் விவகாரங்கள் மூன்றாவதாக இ‌டம் பிடித்திருக்கிறது. முறையற்ற உறவு, ஒரு தலை காதல், போன்ற பிரச்னைகளால் 44 ஆயிரத்து 412 கொலைகள் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. ‌ 2016ல்‌‌ 71 ஆணவக் கொலைகள்‌‌‌ ‌நடந்துள்ள நிலையில், 2017ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 92ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com