விபத்தில் கைகள் மற்றும் கால்களை இழந்த இளைஞர் ஒருவர் தனது முழங்கைகளைப் பயன்படுத்தி 12 வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் வசித்து வருபவர் சிவம் சோலங்கி. இவர் தனக்கு 13 வயது இருக்கும்போது விபத்து ஒன்றில் சிக்கினார். இந்த விபத்தில் அவர், கைகள் மற்றும் காலை இழந்தார். ஆனால் இந்த இளைஞர் கைகளை இழந்தாலும் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆகவே அவர் தன் முழங்கையைப் பயன்படுத்தி எப்படி எழுதுவது எனக் கற்றுக் கொண்டார். அந்தப் பயிற்சியைக் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வினை எழுத இருக்கிறார். அதற்காக அவர் இரவு பகலாக படித்து வருகிறார்.
இது குறித்து பேசிய சிவம் சோலங்கி, “நான் தயாராக இருக்கிறேன். நான் 10 வது வகுப்பு தேர்வில் பெற்றதைவிட மிக அதிகமான மதிப்பெண்களைப் பெறுவேன் என்று நம்புகிறேன்” என்றார்.
தேர்வு குறித்து மற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், “இது ஒரு பரீட்சை மட்டுமே. எனவே உங்கள் முழு வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்பதை இது தீர்மானிக்காது என்பதால், மற்ற மாணவர்களைப் பற்றி மன அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றாகத் தயாராகி சிறப்பாகச் செய்யுங்கள்” என்றார்.
இது குறித்து சிவம் சோலங்கியின் தந்தை, “எனது மகன் அவனது பள்ளியிலிருந்து நிறைய உதவிகளையும் ஆதரவையும் பெற்றிருக்கிறான். ஆசிரியர்கள் அவனுக்கு உதவி தேவைப்படும்போது செய்து தருகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.