சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தல் என்பது கூட்டாட்சித் தத்துவத்தின் பெருமைமிகு அடையாளமாக மாறியுள்ளதாகக் கூறி பிரதமர் மோடி, இதன் காரணமாக சரக்குப் போக்குவரத்து துரிதமடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
பல்வேறு இயற்கை இடர்களையும் தாண்டி நாடு சிறப்பான உணவுதானிய உற்பத்தியைக் கண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, 2019 ஆம் ஆண்டில் நாட்டில் 99 நீர்ப்பாசன திட்டங்களுக்கான பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், சவால்களை கடந்து நாம் ஒற்றுமையுடன் இருப்பதை சுதந்திர தின நிகழ்வு காட்டுவதாக அவர் பெருமிதத்துடன் கூறினார். இயற்கை பேரிடர்களால் சில நேரங்களில் இன்னலை சந்திப்பது வேதனையளிப்பதாகவும், ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள் என்றும் மோடி கூறினார்.