‘சம்பளமா கேட்குற...? இங்கேயே இரு...’ - க்ளீனரை பாதியில் விட்டுச்சென்ற லாரி உரிமையாளர்!

கேரளாவிற்கு சென்றபோது சம்பளம் கேட்டதற்காக க்ளீனரை லாரியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு, சொந்த மாநிலமான கர்நாடகா மாநிலத்துக்கு திரும்பியிருக்கிறார் ஒரு லாரி உரிமையாளர். என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...
லாரி
லாரிகோப்புப்படம்
Published on

வேலை செய்பவர்கள் அனைவருமே வேலைக்கான ஊதியத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் வேலையை வாங்கிக்கொண்டு உரியவரிடம் சம்பளத்தை தராமல் போனால்... அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கேரளா வந்த நேஷனல் பெர்மிட் லாரியில் உரிமையாளரும் க்ளீனர் ஜோசப்பும் இருந்துள்ளனர். இந்த லாரியானது கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளது. இதை அதன் உரிமையாளரே ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

க்ளீனர் ஜோசப்
க்ளீனர் ஜோசப்

கடந்த சனிக்கிழமை இரவு திருவனந்தபுரத்தில் குறிப்பிட்ட முகவரியில் சரக்கை இறக்கியதும், மீண்டும் லாரி கர்நாடகா நோக்கி சென்றுள்ளது. க்ளீனரான ஜோசப் மர்றும் உரிமையாளர் அடுத்தடுத்த வீடு என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனக்கு தரவேண்டிய சம்பள பணம் ரூபாய் 8,000-ஐ தன்னிடம் கொடுக்குமாறு லாரியின் உரிமையாளரிடம் ஜோசப் கேட்டுள்ளார்.

அதற்கு, லாரியின் உரிமையாளர்... “அதற்கென்ன கொடுத்துவிட்டால் போச்சு... அதற்கு முன்பு எனக்கு ஒரு சிகரெட் வாங்கிட்டு வா...” என்று கூறி ஜோசப்பிடம் சிகரெட்டுக்கான பணத்தை கொடுத்து இருக்கிறார். ஜோசப்பும் லாரியிலிருந்து இறங்கி அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்க சென்றுள்ளார். அப்போது, ஜோசப்பை விட்டுவிட்டு லாரியை எடுத்துக்கொண்டு உரிமையாளர் சென்று விட்டார். ஜோசப்பின் உடைகள், பர்ஸ், செல்போன் என மொத்தமும் அந்த லாரியில் இருந்துள்ளது.

லாரி
கேரளா: பயிற்சி அளிப்பது போல் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் கோச் போக்ஸோவில் கைது!

கையில் சிகரெட்டுடன் வந்த ஜோசப் லாரியை காணாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட நேரமாக அங்கேயே நின்றுக்கொண்டு இருந்துள்ளார். பிறகு அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவரின் புகாரை காவலர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

லாரி
லாரிகோப்புப்படம்

இந்நிலையில், எப்படியாவது தனது ஊர் போய் சேர நினைத்த ஜோசப் குருப்பந்தரைக்கு சென்று எர்ணாகுளம் செல்லும் ரயிலில் ஏறி இருக்கிறார். அங்கு டிக்கெட் பரிசோதகர் இவரிடம் டிக்கெட் இல்லை என்பதால் ரயிலிலிருந்து இறக்கி விட்டு இருக்கிறார்.

என்ன செய்வது என்று தெரியாதல் தவித்துக்கொண்டு நின்ற ஜோசப்பை பார்த்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர் சிலர், ஜோசப்பிற்கு உணவு வாங்கிக் கொடுத்து, மங்களூர் செல்ல டிக்கெட்டிற்கான பணத்தையும் கொடுத்து உதவியுள்ளனர். ஊருக்கு சென்றபின் பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி, ஆட்டோ டிரைவர்களின் எண்ணையும் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார் அவர்.

நன்றி: மனோரமா

லாரி
கேரளா: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் கடனை ரத்து செய்ய கேரள வங்கி முடிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com