ஜெர்மனிக்கு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணா... எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாரா?

பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணாமுகநூல்
Published on

ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நீதிபதி முன் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்ட தகவல் அறிக்கையில் கூடுதலாக இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது 376(1)N, 354b, 354c, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் குற்றச்சாட்டு புகார்|பிரிஜ் பூஷன் சிங்கிற்குப் பதில் அவரது மகனுக்கு சீட்.. பாஜக அறிவிப்பு

மேலும் சிறப்பு புலனாய்வுக் குழு காவல்துறையினர், பிரஜ்வல் ரேவண்ணாவை தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் புகார்|கர்நாடக எம்.பிக்கு சம்மன்.. அவகாசம் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

முன்னதாக கடந்த வாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் மீது பாலியல் புகார்கள் எழுந்திருந்தது. ஹசன் மக்களவைத்தொகுதியில் மீண்டும் போட்டியிடும் எம்பியான 33 வயது பிரஜ்வல் ரேவண்ணா, வாக்குபதிவு முடிந்த நிலையில் ஜெர்மனிக்கு தப்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com