நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்

நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்

நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்
Published on

நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னைக்கு தீர்ப்பாயம் தனியாக அமைக்கப்பட்டது போலவே பல்வேறு நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நதிநீர் பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்து தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தது. அதற்காக புதிய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடைபெற்றது. 

இதனால் தமிழக அரசு போராடி பெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் நிலை என்னவாகும் என மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்பாயம் அமைக்கப்பட்டாலும் காவிரி ஆணையத்தின் பணி தொடரும் எனத் தெரிவித்தார். ஒரே தீர்ப்பாய மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என விளக்கமளித்தார். 

நீண்ட விவாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் உள்ள நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஒரே நதிநீர் தீர்பாயத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. திருத்தம் கொண்டு வர வேண்டுமென அதிமுக வலியுறுத்தியது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com