வடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்?

வடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்?
வடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்?
Published on

நாடாளுமன்ற இறுதிக் கட்ட தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கும் உள்ள வாக்குப்பதிவு சதவிகித வித்தியாசத்தை டைம்ஸ் நவ், வி.எம்.ஆர் ஊடகங்கள் தொகுதி வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் சில மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் வாக்கு சதவிகிதத்தை பார்க்கலாம்.

பீகார் மாநிலத்தில் ஜகானாபாத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 57.02 சதவிகிதமும் 2019 ஆம் ஆண்டில் 52.06 சதவிகிதமும் பதிவாகியுள்ளது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை பாரசத் தொகுதியில், 2014 ஆம் ஆண்டில் 83.91 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு 2019 ஆம் ஆண்டில் 74.41 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல் பசீர்கத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 85.45% ஆக இருந்த வாக்குப்பதிவு 2019 ஆம் ஆண்டில் 77.77% ஆகவும், ஜெய்நகர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 81.31% ல் இருந்து 2019 ஆம் ஆண்டு 75.81% ஆகவும் மதுராபூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 85.00% ல் இருந்து 2019 ஆம் ஆண்டில் 78.52% ஆகவும் குறைந்துள்ளது. 

டயமண்ட் ஹார்பர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 81.06% ஆக இருந்த வாக்குப்பதிவு 2019 ஆம் ஆண்டில் 77.31% ஆகவும் ஜாதவ்பூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 79.73% ல் இருந்து 2019 ல் 72.45% ஆகவும் கொல்கத்தா தக்சினில் 2014 ஆம் ஆண்டு 69.30% ல் இருந்து 2019 ஆம் ஆண்டு 67.09% ஆகவும் கொல்கத்தா - உத்தர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 66.65% ஆக இருந்த வாக்குப்பதிவு 2019 ல் 61.18% ஆகவும் பதிவாகியுள்ளது. 

சண்டிகர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 73.71% ல் இருந்து 2019 ஆம் ஆண்டு 63.57% ஆக குறைந்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரை காங்ராவில் 2014 ஆம் ஆண்டு 63.52% ல் இருந்து 2019 ஆம் ஆண்டு 61.67% ஆகவும் மண்டியில் 2014 ஆம் ஆண்டு 63.12% ல் இருந்து 2019 ஆம் ஆண்டு 67.71% ஆக பதிவாகியுள்ளது. 

ஹமீர்பூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 66.94 சதவிகிதமும் 2019 ஆம் ஆண்டில் 68.82 சதவிகிதமும், சிம்லாவில் 2014 ஆம் ஆண்டு 63.97 சதவிகிதமும் 2019 ஆம் ஆண்டில் 67.60 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.  

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜ்மஹல் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 70.31 சதவிகிதமும் 2019 ஆம் ஆண்டில் 71.69 சதவிகிதமும் தும்காவில் 2014 ஆம் ஆண்டு 70.94% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 71.97% ஆகவும் கோடா தொகுதியில் 2014 ஆம் ஆண்டில் 65.97% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 69.02%ஆகவும் பதிவாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தேவாஸ் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 70.75% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 73.88% ஆகவும் உஜ்ஜைன் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 66.63% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 67.53% ஆகவும் மண்ட்சூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 71.40% ஆகவும் 2019 ஆம் ஆண்டு 73.01% ஆகவும் ராட்லம் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 63.59% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 69.18% ஆகவும் தார் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 64.54% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 67.18% ஆகவும் இண்டூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 62.25% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 64.35% ஆகவும் கார்கோன் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 67.67% ஆகவும் 2019 ஆம் ஆண்டு 70.69% ஆகவும் காண்ட்வா தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 71.46% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 70.57% ஆகவும் பதிவாகியுள்ளது. 

உத்திரப் பிரதேசத்தை பொறுத்தவரை மஹாரஜ்கஞ் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 60.59% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 61.25% ஆகவும் கோரக்பூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 54.62% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 54.44% ஆகவும் குஷிநகர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 56.54% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 53.20% ஆகவும் தேரியா தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 53.77%  ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 53.30% ஆகவும் பான்ஸ்கான் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 49.88% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 52.79% ஆகவும் கோஷி தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 54.98% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 53.63% ஆகவும் கஜிபூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 54.77% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 55.42% ஆகவும் சண்டாவுளி தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 58.75% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 56.10% ஆகவும் வாரணாசி தொகுதிதியில் 2014 ஆம் ஆண்டு 58.35% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 53.58% ஆகவும் மிர்ஜாபூர் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 58.56% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 59.21% ஆகவும் ராபர்ட்ஸ்கஞ் தொகுதியில் 2014 ஆம் ஆண்டில் 54.05% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 54.89% ஆகவும் வாக்குப்பதிவாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com