மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்று இருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடந்துவருகிறது.
அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தமிழகம் - புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 102 தொகுதிகளுக்கு, கடந்த 19ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 2 ஆம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீரில் உள்ள தலா ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் வெளி மணிப்பூர் தொகுதியின் சில பகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மற்ற பகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பெதுல் தொகுதிக்கு நடைபெறவிருந்த வாக்குப்பதிவு, பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பாலவி-யின் இறப்பை அடுத்து, வரும் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் காலை 11 மணி நிலவரப்படி
கேரளாவில் 25.61 %
கர்நாடகா 23.34 %
ராஜஸ்தான் 26.84 %
உத்தரப்பிரதேசம் 24.31 %
மகாராஷ்டிரா 18.83 %
மத்தியப்பிரதேசம் 28.15 %
வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.