நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18வது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அதற்கான தேதி அட்டவணை இன்று (மார்ச் 16) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டைப் போலவே, இந்த தேர்தலும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி 7வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு பார்ப்போம்.
தமிழ்நாடு (39), புதுச்சேரி (1), அருணாச்சல் பிரதேசம் (2), அசாம் (5), சத்தீஸ்கர் (1), மத்தியப் பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் மற்றும் நிகோபார் தீவு (1), ஜம்மு காஷ்மீர் (1), லட்சத்தீவு (1).
மொத்தத் தொகுதிகள்: 102
மொத்த மாநிலங்கள்: 21
வேட்பு மனு தாக்கல்: மார்ச் 20
வேட்பு மனு கடைசி நாள்: மார்ச் 27
வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 28
வாக்குப் பதிவு: ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4
அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), மத்தியப் பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8), மணிப்பூர் (1), ராஜஸ்தான் (13), உத்தரப்பிரதேசம் (8), திரிபுரா (1), மேற்கு வங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (1)
மொத்தத் தொகுதிகள்: 89
மொத்த மாநிலங்கள்: 13
வாக்குப் பதிவு: ஏப்ரல் 26
அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), கோவா (2), குஜராத் 26), கர்நாடகா (14), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்கம் (4), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (1) மற்றும் டாமன் மற்றும் டையூ (1), ஜம்மு காஷ்மீர் (1)
மொத்தத் தொகுதிகள்: 94
மொத்த மாநிலங்கள்: 12
வாக்குப் பதிவு: மே 7
ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (8), ஜம்மு காஷ்மீர் (1)
மொத்தத் தொகுதிகள்: 96
மொத்த மாநிலங்கள்: 10
வாக்குப் பதிவு: மே 13
பீகார் (5), ஜார்க்கண்ட் (3), மகாராஷ்டிரா (13), ஒடிசா (5), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (7), ஜம்மு காஷ்மீர் (1).
மொத்தத் தொகுதிகள்: 49
மொத்த மாநிலங்கள்: 8
வாக்குப் பதிவு: மே 20
பீகார் (8), ஹரியானா (10), ஜார்க்கண்ட் (4), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7)
மொத்தத் தொகுதிகள்: 57
மொத்த மாநிலங்கள்: 7
வாக்குப் பதிவு: மே 25
பீகார் (8), இமாச்சல் பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), சண்டிகர் (1),
மொத்தத் தொகுதிகள்: 57
மொத்த மாநிலங்கள்: 8
வாக்குப் பதிவு: ஜூன் 1
ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு, அருணாச்சல், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், அந்தமான் நிகோபார் தீவு, சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு, டெல்லி,
இரண்டுகட்டத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்கள்
கர்நாடகா, மணிப்பூர், திரிபுரா, ராஜஸ்தான்,
மூன்றுகட்டத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்கள்
அசாம், சத்தீஸ்கர்
நான்குகட்டத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்கள்
ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா,
ஐந்துகட்டத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்கள்
மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர்
ஏழுகட்டத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்கள்
பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம்,