வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் வேளாண்துறை !

வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் வேளாண்துறை !
வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் வேளாண்துறை !
Published on

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொரோனாவை தொடர்ந்து அடுத்ததாக உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்னை வெட்டுக்கிளிகள். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இருக்கும் என ஐநா எச்சரித்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், ஒடிசா உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு வரத் தொடங்கியது.

இது குறித்து வேளாண்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் "ராஜஸ்தானின் 21 மாவட்டங்களும், மத்தியப் பிரதேசத்தின் 18 மாவட்டங்களும், குஜராத்தின் 2 மாவட்டங்களும், பஞ்சாபின் ஒரு மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகளைப் படையெடுப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அஜ்மர், சித்தோர்கார், தவுசா, மந்த்சார், உஜ்ஜைன், ஷிவபுரி, ஜான்ஸி ஆகிய இடங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுத்த தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது வரை ராஜஸ்தானின் பார்மர், ஜோத்பூர், நாகவுர், பிகானர், கங்கா நகர், ஹனுமான்கர், சிகார், ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளி தாக்குல் நடந்திருக்கிறது. இதனையடுத்து மத்தியப் பிரதேசத்தின் சாத்னா, குவாலியர், சீதி, ராஜ்கர், பைதுல், தேவாஸ், அகர் மால்வா ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி தாக்குதலை நடத்தியுள்ளது. வெட்டுக்கிளிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க 200 வெட்டுக்கிளிகள் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"டைம்ஸ் நவ்" இணையதள செய்தியின்படி விவசாயத்துறை அமைச்சகம் சார்பில் இதுவரை 47 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புக்குப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலப்பரப்பு மொத்தம் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களை உள்ளடக்கியது. மேலும் இந்தப் படையெடுப்பில் முழுவதும் வளராத வெட்டுக்கிளிகளே அதிகம் இருக்கிறது, எனவே அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குச் சிரமமாக இருக்கிறது என்று வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com