கோவாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 7 மணி முதல் மே 3 ஆம் தேதி காலை வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
பொது முடக்க நாள்களில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் கசினோக்கள், ஹோட்டல்கள், பப்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொது முடக்க நாட்களில் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும், தொழில் தொடர்பான போக்குவரத்துக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படும், அதேவேளையில் மாநில எல்லைகள் மூடப்படாமல் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று பிரமோத் சாந்த் தெரிவித்துள்ளார்.