திருவனந்தபுரத்தில் ஒருவாரத்திற்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு

திருவனந்தபுரத்தில் ஒருவாரத்திற்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு
திருவனந்தபுரத்தில் ஒருவாரத்திற்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு
Published on

திருவனந்தபுரத்தில் ஒரு வாரத்திற்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் தற்போது 3,099 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவனந்தபுரத்தில் பூந்துறை பகுதியில் மிக வேகமாக நோய் பரவி வருகிறது. உலக சுகாதாரத் துறையின் புதிய அறிக்கையின்படி கொரோனா நோய் பரவும் வேகம் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கேரளா தற்போது நோய்ப் பரவலில் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சமூகப் பரவல் என்ற அபாய கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவனந்தபுத்தில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூன்று முறை பொதுமுடக்கம் விதிக்கப்படும்”எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com