வெறும் 1000 ரூபாய் கடனைத் திருப்பிக்கேட்ட இளைஞர் குத்திக் கொலை!

வெறும் 1000 ரூபாய் கடனைத் திருப்பிக்கேட்ட இளைஞர் குத்திக் கொலை!
வெறும் 1000 ரூபாய் கடனைத் திருப்பிக்கேட்ட இளைஞர் குத்திக் கொலை!
Published on

வெறும் 1,000 ரூபாய் கடனுக்காக 19 வயதான இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வெல்கம் பகுதியில் வசிக்கும் சோஹைல் மற்றும் ஃபர்ஹான் இருவரும் தனது நண்பரான அமானிடமிருந்து ரூ 1000 கடன் வாங்கியுள்ளனர். அமான் பலமுறை கேட்டும் கடனை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, அந்த தொகையை திருப்பித் தர முடியாததால் சோஹைலை அமன் தாக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று, சோஹைல் மற்றும் ஃபர்ஹான் இருவரும் அமானின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் இருவரும் அமானுடன் பேசி சமரசம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அப்போது மூன்று நண்பர்களும் கடன் வாங்கிய பணம் குறித்து வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.

வாக்குவாதம் அதிகரித்தபோது, சோஹைலும் ஃபர்ஹானும் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அமானை ஐந்து முதல் ஆறு முறை கத்தியால் குத்தியுள்ளனர். இதையடுத்து அமான் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தப்பியோடிய சோஹைல் மற்றும் ஃபர்ஹான் இருவரையும் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com