தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை, பாஜக 240 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், லோக் ஜனசக்தி 5, மதச்சார்பற்ற ஜனதா தளம் 2, மற்றவை 10 என என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்க முனைந்துள்ளது பாஜக.
I.N.D.I.A. கூட்டணியை பொறுத்தவரை மொத்தம் 234 தொகுதிகளில்வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் திமுக 22 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 9 தொகுதிகளிலும் வாகைசூடியுள்ளன. அதேபோல், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 8, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, ஆம் ஆத்மி 3, ஐயூஎம்எல் 3 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்துள்ளன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3, இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
இரு கூட்டணி கட்சிகளுமே, இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியமைப்பது குறித்தும்; I.N.D.I.A. கூட்டணி அதை தங்களால் வீழ்த்த முடியுமா / வாய்ப்புள்ளதா என்பதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளும் என தெரிகிறது!