கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை காட்டிலும் கூடுதலாக காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. அக்கட்சி 134 இடங்களில் வெற்றிபெற்றும், 2 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. பாஜக 64 இடங்களில் வெற்றியும், 1 இடங்களில் முன்னிலையும் வகிக்கிறது. மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. (இது இரவு 8.30 மணி நிலவரம்)
இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்துப் பார்க்கலாம்.
1. கோவிந்த கரஜோளா (நீர்ப்பாசனத்துறை)
2. பி.ஸ்ரீராமுலு (போக்குவரத்துத்துறை)
3. வி. சோமண்ணா (வீட்டு வசதித்துறை)
4.ஜே.சி.மது சுவாமி (சட்டத்துறை)
5. முருகேஷ் நிரானி (தொழில்துறை)
6.பி.சி.பாட்டீல் (விவசாயத்துறை)
7. கே. சுதாகர் (சுகாதாரத்துறை)
8. எம்.டி.பி.நாகராஜ் (நகராட்சி நிர்வாகத்துறை)
9. கே.சி.நாரயண கௌடா (விளையாட்டுத்துறை)
10. பி.சி.நாகேஷ் (தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி)
11. ஷங்கர் பாட்டீல் (ஜவுளித்துறை)
12. ஹாலப்பா ஆச்சார் (சுரங்கம் மற்றும் புவியியல் துறை)
மேலும், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டுள்ள தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி பின்னடைவை சந்தித்துள்ளார். இதேபோல், முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.