1964 முதல் 2024 வரை - இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகள் - ஓர் பார்வை

1964 முதல் இன்று வரை நடந்த மோசமான ரயில் விபத்துகள் என்னென்ன? எப்பொழுது நடந்தது என்பதை பார்க்கலாம்.
ரயில் விபத்துக்கள்
ரயில் விபத்துக்கள்புதிய தலைமுறை
Published on

சமீபத்தில் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், விபத்தில் பாதிக்கப்படுவது பயணிகளும் அவர்களது குடும்பங்களும்தான். அந்தவகையில், 1964 முதல் இன்று வரை நடந்த மோசமான ரயில் விபத்துகள் என்னென்ன? எப்பொழுது நடந்தது என்பதை பார்க்கலாம்.

1964 to 2024 - இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகள் - ஓர் பார்வை

1964 இல் ராமேஸ்வரம் பகுதியில் வீசிய புயலால் பாம்பன் பாலம் அடித்துச் செல்லப்பட்டதில் அதன் மீது சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் கடலில் விழுந்து சுமார் 120 பேர் உயிரிழந்தனர்.

1981ஆம் ஆண்டு பீகாரில் நடந்த ரயில் விபத்து இந்தியாவின் மிகமோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது. பாக்மதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்தனர். 286 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டாலும் 800 பேர் வரை இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரயில் விபத்துக்கள்
மேற்கு வங்க ரயில் விபத்து - 5 பேர் பலி; இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம்?

1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.

ஒடிசா ரயில்விபத்து
ஒடிசா ரயில்விபத்து

1998 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பஞ்சாப்பில் நேரிட்ட விபத்தில் 212 பேர் இறந்தனர். தடம்புரண்டு நின்ற ரயில் மீது விரைவு ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.

1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் பிரம்மபுத்ரா மெயிலும் அவத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 300 பயணிகள் உயிரிழந்தனர்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பரில் பீகார் மாநிலத்தில் தாவே நதி அருகே ஹௌரா ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் சுமார் 130 பேர் உயிரிழந்ததாக ரயில்வே தெரிவித்தது.

2010 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலும் விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

ஆந்திரா ரயில் விபத்து
ஆந்திரா ரயில் விபத்து

2023ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம்தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கோரமண்டல் விரைவு ரயில், பஹானாகா பஜார் நிலையம் அருகே இரவு 7 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும்அதிகமானோர் காயம் அடைந்தனர்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில், கொத்தவலசா சந்திப்பு ரயில் நிலையம் அருகே, விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மோதியதில், விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் தடம் புரண்டது. 14 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப்
பஞ்சாப்

2024 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே சரக்கு ரயிலும், விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும்காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com