இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு (IMFL)விற்பனை வரியை 4% உயர்த்த கேரளா மாநில அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளதது.
முன்னதாக கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் , மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர வாய்ப்புள்ளது என கேரள கலால் துறை அமைச்சர் எம்.வி. கோவிந்தன் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது 4% வரி உயர்வை கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதது. இதனால் கேரளாவில் முதற்கட்டமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு மட்டும் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
இதேபோல், தமிழகத்தில் மார்ச் மாதம் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 15% வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.