திருமணங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கவேண்டும் என மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
திருமண பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் திருமணம் செய்து ஏமாற்றுபவர்களை தடுக்க முடியும் என்று ஆணையம் கூறியுள்ளது. கைவிடப்பட்ட பெண்களுக்கு கணவனிடமிருந்து உதவியை பெற்றுத் தரவும் இது உதவியாக இருக்கும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. சட்ட ஆணையம் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பித்த 270வது அறிக்கையில் இந்தப் பரிந்துரை இடம்பெற்றுள்ளது.