குடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும் இதற்காக போராடுபவர்கள் தொடர்ந்து போராடலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பேசிய அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தொடர்ந்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாக குறிப்பிட்டார்.
இச்சட்டத் திருத்தம் குறித்து தம்முடன் விவாதிக்க தயாரா என ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அமித் ஷா சவால் விட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.