கேரள மாநிலத்தில் ஆரிப் முகமது கான் ஆளுநராக இருந்து வருகிறார். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. கேரளாவை பொறுத்தவரை ஆண்டின் தொடக்க சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
அரசு தயாரிக்கும் கொள்கை அறிவிப்பு அறிக்கையை ஆளுநர் படித்து முடிப்பார். பின்னர் சபாநாயகர் மாநில மொழியில் திரும்ப படிப்பார். இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு 9 மணிக்கு வந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், அவையில் உள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அறிக்கையின் கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டும் படித்தார்.
பின்னர் அவையில் இருந்து வெளியேறினார். முன்னதாக அவர் தான் அறிக்கையின் கடைசி பத்தியை மட்டுகே படிக்க போவதாக குறிப்பிட்டு வெறும் 1.17 நிமிடங்களில் உரையை முடித்துக்கொண்டார். இது சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.