சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அதிருப்தியாளர்களை சமாளிக்க, கோவிந்த கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவடி ஆகி யோருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் லட்சுமண் சவடி, ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி, கர்நாடக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
(லட்சுமண் சாவடி)
அப்போது லட்சுமண், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அதை அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் சி.சி. பாட்டீல் எட்டிப்பாரத்துக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து அவர் பதவியை ராஜினிமா செய்தார். அவருக்கு இப்போது அமைச்சரவையில் இடம் அளித்திருப்பதை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசாமி, ‘’சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘’ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியில் தவறானதுதான். அவர், எதிர்பாராதவிதமாக செல்போனி ல் அதை பார்த்துவிட்டார். அதற்காக அவர் அமைச்சராகக் கூடாது என்று வாதிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் எல் லோரும் தவறு செய்பவர்கள்தான். அவர், யாரையும் ஏமாற்றவிலை அல்லது தேச விரோத செயல்களில் ஈடுபடவில்லை. அதற்காக ஆபாச படம் பார்ப்பது சரி என்று சொல்லவில்லை. அந்த விவாதம் தேவையற்றது என்றுதான் கூறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.