கடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 339 பாதுகாப்பு படை வீரர்கள் பலி !
கடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவரவாத சம்பங்கள் அதிகரத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்த வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது 2014 ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மொத்தமாக 1708 தீவரவாத தாக்குதல்கள் நடைபெற்றதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்டு மொத்த தாக்குதல்கள்
2014 222 தாக்குதல்கள்
2015 208 தாக்குதல்கள்
2016 322 தாக்குதல்கள்
2017 342 தாக்குதல்கள்
2018 614 தாக்குதல்கள்
மேலும் இந்தத் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகளும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2014-2018 வரை மொத்தம் 1315 பேர் தீவரவாத செயல்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றது. அதில் 138 பொதுமக்களும், 339 பாதுகாப்பு படை வீரர்களும், 838 தீவரவாதிகளும் உயிரிழந்தாக அந்தத் தரவுகள் கூறுகின்றன.
ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
பொதுமக்கள் பாதுகாப்பு படை வீரர்கள் தீவரவாதிகள்
2014 28 47 110
2015 17 39 108
2016 15 82 150
2017 40 80 213
2018 38 91 257
அதேபோல கடந்த 2016 முதல் 2018 வரை மொத்தம் 398 தீவரவாதிகள் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2018 ஜூன் மாதம் மட்டும் 38 தீவரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்த தரவுகள் கூறுகின்றன.
ஆண்டு ஊடுருவிய தீவரவாதகள் எண்ணிக்கை
2016 119 தீவரவாதிகள்
2017 136 தீவரவாதிகள்
2018 143 தீவரவாதிகள்
அத்துடன் கடந்த 2016 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவவில்லை என்றும் கூறுகின்றன. அதாவது 2016 ஆண்டில் உரி தாக்குதல் நடைபெற்ற பிறகு அந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தீவிரவாதிகள் ஊடுருவவில்லை. அதற்கு பிறகு 2018 ஆண்டின் டிசம்பர் மாதத்திலும் தீவரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவவில்லை என்பது தெரியவந்துள்ளது.