ஜம்மு - காஷ்மீர்: 2 தொழிலாளர்கள் படுகொலை; எச்சரிக்கை விடுத்த தீவிரவாத அமைப்பு

ஜம்மு - காஷ்மீர்: 2 தொழிலாளர்கள் படுகொலை; எச்சரிக்கை விடுத்த தீவிரவாத அமைப்பு
ஜம்மு - காஷ்மீர்: 2 தொழிலாளர்கள் படுகொலை; எச்சரிக்கை விடுத்த தீவிரவாத அமைப்பு
Published on

காஷ்மீரில் பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களின் கொடூர கொலைக்கு ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பான லக்‌ஷர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை காஷ்மீரை விட்டு வெளியேறுமாறும் எச்சரித்திருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் வெளியூர்காரர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெறுவது தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் தெற்கு காஷ்மீரின் குல்காமில் தங்கியிருந்த மற்றொருவரை காயப்படுத்தி இருக்கின்றனர்.

ஒரேநாளில் மூன்று இடங்களில் தங்கியிருந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை மாலை பீகாரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தச்சர் என இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் 11 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்குமார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலார்களை அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு வரவழைத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com