பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். 74 வயதாகும் லாலு பிரசாத், உடல்நிலை பாதிப்பால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
சிறுநீரக கோளாறுக்கு உயர் சிகிச்சை பெற சில வாரங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூர் சென்றார். அங்கு சிகிச்சை முடித்து கடந்த மாதம் தான் வீடு திரும்பினார். இருப்பினும் மீண்டும் அவரது சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால், உடனடியாக சிறுநீரகம் மாற்றும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா, தன் தந்தைக்கு சிறுநீரகம் அளிக்க முடிவு செய்துள்ளார். லாலுவின் இரண்டாவது மகள், சிங்கப்பூரில் வசிக்கும் ரோகினி ஆச்சார்யா, தன் தந்தைக்கு கிட்டியை கொடுக்கிறார் என்ற செய்தி வந்தவனம் இருந்தன. இந்த செய்தியை தற்போது உறுதி செய்துள்ளார் ரோகினி.
இதுகுறித்து ரோகினி ஆச்சார்யா கூறுவது, ``ஆம், அந்த செய்தி உண்மைதான். என் அப்பாவுக்கு என்னுடைய சிறுநீரகத்தை அளிக்கப் போகிறேன். அதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். ரோகினி ஆச்சாரியாவின் முடிவு அனைவரையும் ஆச்சரியத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடந்து, இந்த மாதம் இறுதியில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் என கூறப்படுகிறது.
இளம் வயது பெண், தந்தைக்கு தனது கிட்டியை கொடுத்து, உயிரை காக்கும் மகளின் செயலை அனைவருக்கும் பாராட்டப்பட்டு வருகிறது.