சிபிஐ அலுவலகத்தில் லாலு பிரசாத் ஆஜர்

சிபிஐ அலுவலகத்தில் லாலு பிரசாத் ஆஜர்
சிபிஐ அலுவலகத்தில் லாலு பிரசாத் ஆஜர்
Published on

ரயில்வே ஓட்டல்களுக்கான ஒப்பந்தத்தை முறைகேடாக வழங்கிய வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது, இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதில், முறைக்கேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

லாலு பிரசாத் அக்டோபர் 5-ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் 6-ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் லாலு பிரசாத் யாதவ் இன்று ஆஜரானார். லாலு பிரசாத் ஆஜரானதால் சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com