இந்திய மற்றும் சீன படைவீரர்கள் சண்டையிட்டு கொண்ட பள்ளத்தாக்கு கல்வான் என்று அழைக்கப்பட காரணம் என்ன?
கல்வான் கரகோரம் என்னும் பகுதியில் உற்பத்தியாகி, அக்சய் சின் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் பயணித்துப் பின் புகழ்பெற்ற இண்டஸ் நதியின் கிளையோடு இணையும் ஆறு தான் கல்வான். இந்த நதியின் பள்ளத்தாக்கு பகுதி "கல்வான் பள்ளத்தாக்கு"" என்று அழைக்கப்படுகிறது. லடாக்கில் வாழ்ந்த கல்வான் என்ற சாசகக்காரர் ஒருவரின் பெயரே அந்த நதிக்கு சூட்டப்பட்டுள்ளது.
லடாக்கில் 1878 ஆம் ஆண்டு பிறந்த குலாம் ரசல் கல்வான் சாகசக்காரர் மற்றும் போர்ப் படைகளுக்கு வழிகாட்டி ஆவார். 12 வயதில் ஏழ்மை காரணமாக கடுமையான சாகசப் பணியை ஏற்றுக்கொண்ட இவருக்கு, பின்னாள்களில் அதுவே பிடித்தமானதாக மாறியது. கடும் பனிபொழியும் பிரதேசங்களில் சற்றும் அசராமல் பயணம் செய்த இவர், பல்வேறு ஐரோப்பிய சாகசக்காரர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
உருது, லடாக்கி, துருக்கி உள்ளிட்ட மொழிகளைப் பேசும் திறன் கொண்டவரான இவர், ஆங்கிலத்தையும் படிப்படியே கற்றுக் கொண்டார். தனது வாழ்க்கைப் பயணம் குறித்த servant of sahibs என்னும் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். ஜம்மு காஷ்மீர் மாகாணமாக இருந்தபோது சுயசுரிதையை ஆங்கிலத்தில் எழுதிய முதல் நபர் கல்வான் என்று கூறப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் கல்வானின் பல பயணங்கள் சுவைப்பட எழுதப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் ராணுவத்தில் சாதாரண பதவியில் இருந்து aksakal என்னும் அதாவது லே மாகாணத்தின் முக்கிய பொறுப்பாளராக உயர்ந்தவர் கல்வான். அவ்வாறு பெருமைக்குரிய கல்வானின் பெயர் இன்றும் பள்ளத்தாக்கின் அடையாளமாக விளங்குகிறது. ஒரு புவியியல் பகுதிக்கு உள்ளூர் சாசகக்காரரின் பெயர் சூட்டப்பட்டது அதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது