ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டுமா? - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி

ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டுமா? - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டுமா? - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி
Published on

திமுகவின் கைப்பாவையாக ஆளுநர் இருக்க வேண்டும்; இல்லையெனில் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்பது நடக்காது என எல்.முருகன் கூறியுள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், ”புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே 400 பேருக்கு காவல்துறையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 ஆயிரம்பேருக்கு வேலை கொடுக்க முடிவுசெய்து முதற்கட்டமாக 1,400 பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கபப்ட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “ஆளுநர்கள் இந்திய அரசியலைமைக்குட்பட்டு செயல்படுகின்றனர். அவர் கருத்து சொல்லக்கூடாது என்று எப்படி கேட்க முடியும்? ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனால் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்பது நடக்காது.

தமிழகத்தில் திமுக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் கேள்வி கேட்கின்றார். ஆனால் அதற்காக அவரை மாற்றவேண்டும் என்று கேட்பதா?’’ என கேள்வியெழுப்பியுள்ளார் எல்.முருகன். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தான் உரிய முடிவெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com