நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக 60 யூடியூப் சேனல்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய எல்.முருகன் இதை தெரிவித்தார். கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் எம்.பி கே.சி வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். கடந்த 2 மாதங்களில் 60 யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களை அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.